பட்டாசு கடைகளில் தீபாவளி விற்பனை தொடக்கம்

வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு கடைகளில் தீபாவளி விற்பனை தொடங்கியது.

Update: 2023-08-04 19:53 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு கடைகளில் தீபாவளி விற்பனை தொடங்கியது.

பட்டாசு கடைகள்

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பட்டாசுகளை விற்பனை செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசு ஆலையில் இருந்து நேரடியாக பட்டாசுகளை வாங்கி கடைகளில் விற்பனை செய்யும் பணியை பூஜையுடன் புதுக்கணக்கு ஆரம்பித்து தொடங்கினர்.

தீபாவளி விற்பனை

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுகளின் ரகங்கள், பட்டாசுகளின் விலை பட்டியல்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட பட்டாசுகளுக்கு தள்ளுபடி செய்வது அது குறித்து அறிவிப்புகளும் விளம்பர பேனர்கள் பட்டாசு கடைகளுக்கு முன்பாக வைத்துள்ளனர்.

சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் தீபாவளி பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும் என பட்டாசு கடைக்காரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்