தீபாவளி பண்டிகை : சென்னையிலிருந்து இதுவரை 1.65 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
1.65 லட்சம் பேர் தீபாவளியையொட்டி, சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் ஆகும். இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் நேற்று முதலே புறப்பட்டு சென்றனர் .
இதையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்டுகிறது.
3,300 பஸ்களில் இதுவரை சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் தீபாவளியையொட்டி, சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.