தொழில்வளம் பெருக தமிழகத்தை 3 ஆக பிரிக்க வேண்டும்; ஈரோட்டில் அர்ஜுன் சம்பத் பேட்டி

தொழில்வளம் பெருக தமிழகத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று ஈரோட்டில் அர்ஜுன் சம்பத் கூறினார்.

Update: 2022-06-26 20:44 GMT

ஈரோடு

தொழில்வளம் பெருக தமிழகத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று ஈரோட்டில் அர்ஜுன் சம்பத் கூறினார்.

கல்வித்தரம்

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண் வளம் காக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை வரவேற்கிறோம். தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துள்ளது. அரசு பொதுத்தேர்வில் தற்போது 40 ஆயிரம் மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். எனவே மத்திய அரசு தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமலாக்க வேண்டும்.

அனைத்து தொழிற்சாலைகளும் சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ளது. தென் மாவட்டங்களில் தொழில் வளம் இல்லை. அங்கு ஆயிரக்கணக்கானோருக்கு வேலை அளித்த ஸ்டெர்லைட் ஆலை சிலரின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இதனால் தாமிரம் இறக்குமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது.

தொழில் வளர்ச்சி

எனவே பண்டைய காலத்தில் இருந்தது போல் தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய நாடுகளை போல் சென்னை, கோவை, தென் மாவட்டம் உள்ளடக்கிய 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். இது பிரிவினைவாதம் அல்ல நிர்வாகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் உறங்காதா என தி.மு.க. எதிர்பார்க்கிறது. எனவே அ.தி.மு.க.வினர் விழிப்புடன் இருக்க வேண்டும். தொண்டர்கள் தான் ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கவேண்டும். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக ஆதரவு உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க.வின் கைப்பாவை என்பது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்