மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றார்.

Update: 2023-01-06 18:51 GMT

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சீனிவாச பெருமாள் நேற்று பொறுப்பேற்றார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வின் மூலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 2010-ம் ஆண்டு தேனியில் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு சிவகாசியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இதனைதொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று மதுரையில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தற்போது விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி மாற்றம் பெற்றார். புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்