மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

வால்பாறையில் மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-07-07 21:00 GMT

வால்பாறை

வால்பாறையில் மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

மண்சரிவு

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நடுமலை எஸ்டேட் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மரமும் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வால்பாறையில் மழை பாதிப்புகளை மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் மழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள், அங்கு எடுக்கப்பட்டு உள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பின்னர் வாழைத்தோட்டம் ஆற்றுப்பகுதியை பார்வையிட்ட அவர்கள், குடியிருப்பு பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை ஆய்வு செய்தனர். அதை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள வெள்ள நிவாரண முகாமை ஆய்வு செய்து, மழை வெள்ளத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அரசு சார்பில் உதவிகள்

மேலும் அரசு சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தேவைப்படும் உதவிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர்.

இந்த ஆய்வின் போது தாசில்தார் அருள்முருகன், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன், நெடுஞ்சாலை துறை உட்கோட்ட பொறியாளர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்