வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் 8-ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் 8-ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதம மந்திரி தேசிய 'அப்ரண்டிசிப் மேளா' திட்டத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 8-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் செய்யாறு சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுனர் பயிற்சிக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்று 2022-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற, 2022-ம் ஆண்டிற்கு முன்னதாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் தொழிற் பழகுநராக இந்த பயிற்சியில் சேரலாம். ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12-ம் வகுப்பு கல்வித் தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்ந்து பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
இம்முகாமிற்கு வருகைபுரியும் பயிற்சியாளர்கள் www.apprenticeshipinida.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் எடுத்து வர வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.