மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.;
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2023-24-ம் ஆண்டுக்கு 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உள்ளடக்கிய வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து கீழ்கண்டவாறு முகாம்கள் நடைபெறவுள்ளன.
சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்றத்தூரில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாலாஜாபாத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.
ராணி அண்ணாதுரை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
காஞ்சீபுரம் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீபெரும்புதூர். அடுத்த மாதம் 17-ந்தேதி.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர். அடுத்த மாதம் 19-ந்தேதி.
இந்த முகாமில் அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு பயனடையலாம்.
முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 போன்றவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், காஞ்சீபுரம் என்ற முகவரியையும், 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.