தோகைமலை அருகே உள்ள கூடலூர் ஊராட்சி செம்பாறை கல்லுப்பட்டி விளையாட்டு திடலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 46 அணிகளின் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் முதல் பரிசை கரூர் மாவட்டம், கல்லடை அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 2-வது பரிசை செம்பாறைக்கல்லுப்பட்டி எஸ்.கே.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 3-வது பரிசை திருச்சி மாவட்டம் தொட்டியம் பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி அணியும், 4-வது பரிசை பொம்மாநாயக்கன்பட்டி சிவனேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றன.இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணம், கோப்பையும், சிறந்த பயிற்சியாளர்கள், சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.