நெல்லையில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
நெல்லையில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி தொடங்கியது;
நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஏ.கே.கருவேலம் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நேற்று காலையில் தொடங்கியது. இந்த போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த போட்டி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதிசற்குணம் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.