அஸ்தினாபுரத்தில் இன்று மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி அஸ்தினாபுரத்தில் இன்று (திங்கட்கிழமை)நடக்கிறது.

Update: 2022-07-24 18:23 GMT

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக செஸ் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் 278 பள்ளிகளை சேர்ந்த 604 மாணவர்களும், 491 மாணவிகள் என மொத்தம் 1,095 பேர் விளையாடினர். 6 வட்டார அளவிலான இந்த செஸ் போட்டியில் ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் முதல் 3 இடங்களை பெற்ற தலா 18 மாணவ-மாணவிகள் என மொத்தம் 108 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) அஸ்தினாபுரம் மாதிரி பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்