வட்டார அளவிலான தடகள போட்டி

ஜோலார்பேட்டையில் வட்டார அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

Update: 2023-08-29 18:58 GMT

ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் வட்டார அளவிலான மகளிருக்கான தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.எஸ்.பெரியார் தாசன் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன் கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவிகள் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் 3000, 800, 600, 400, 200, 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஹேமலட்சுமி, சக்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் திருமூர்த்தி, ஏசுராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் அனுராதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்