மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் 1-ந் தேதி நடக்கிறது

Update: 2023-06-28 20:02 GMT


விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் வருகிற 1-ந் தேதி இந்நகர் வி.வி.வி.அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் மற்றும் துணைஅமைப்புநிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும், பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்