மாவட்ட சதுரங்க போட்டி:வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 80 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 216 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகள, 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி வரவேற்றார். காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு, தூத்துக்குடி எஜூகேசன் சொசைட்டி பொருளாளர் முத்துசெல்வம், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக துணை செயலாளர் நந்தகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு 10 பரிசுகள், மாணவிகளுக்கு 10 பரிசுகள் என 4 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 80 பரிசுகள் வழங்கப்பட்டன. 7 வயது மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாநில போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்