பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கல்

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Update: 2023-09-21 19:06 GMT

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில், பிரதமர் நரேந்திர மோடி 73-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குடி வடகாடு முக்கம் பஸ் ஸ்டாப் அருகில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சரவணன் வரவேற்றார். சுற்றுச்சூழல் பிரிவின் மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவர் அமுதவல்லி சிதம்பரம், மாவட்ட துணை தலைவர் ஞான வில்லன்துரை, பா.ஜ.க. மூத்த நிர்வாகி முத்துவேல் வாண்டையார், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வக்கீல் ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 1,000-த்திற்கும் அதிகமான மா, பலா, கொய்யா, வேம்பு மற்றும் தேக்கு உள்ளிட்ட பல வகையான கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மர க்கன்றுகளை வாங்கி சென்றனர். இதில் மாவட்ட பொருளாளர் பாலு, இளைஞர் அணி மாவட்ட தலைவர் ராமஜெயம், தொகுதி பொறுப்பாளர் சிவகுமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்