ரேஷன் கோதுமை குப்பையில் வீச்சு
கோத்தகிரியில் ரேஷன் கோதுமை குப்பையில் வீசப்பட்டு உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் அடிக்கடி ரேஷன் கோதுமை கொட்டப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சிலர் அவ்வாறு வாங்கி செல்லும் கோதுமையை பயன்படுத்தாமல் குப்பை தொட்டிகளில் கொட்டி விட்டு செல்கின்றனர். இவற்றை காட்டுப்பன்றிகள் தின்று வருகின்றன. எனவே, உணவு பொருட்களை வீணாக்காமல் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.