தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
கழுகுமலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
கழுகுமலை:
கழுகுமலை தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் நிலைய அலுவலர் விளக்கி பேசினார். கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னணி தீயணைப்போர் சுந்தர்ராஜ் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.