திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மோர் வினியோகம் - நிர்வாகம் ஏற்பாடு

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மோர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2023-02-22 07:31 GMT

திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது கோடை வெப்பம் தொடங்கியதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின்படி திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மோர், வெல்லம் பானகம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. வெயில் காலம் முடியும் வரை நீர், மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முருகன் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம் இன்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்