தேவூர் அருகே கல்வடங்கம்காவிரி ஆற்றில் 7 நாட்களில் 1,043 விநாயகர் சிலைகள் கரைப்பு
தேவூர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் 7 நாட்களில் 1,043 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
தேவூர்
தேவூர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் 7 நாட்களில் 1,043 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடந்த 7 நாட்களாக வாகனங்களில் மேளதாளத்துடன் கொண்டு வந்து பொதுமக்கள் கரைத்தனர்.
முதல் நாளில் 97 விநாயகர் சிலைகள், 2-வது நாளில் 163 விநாயகர் சிலைகள், 3-வது நாள் 627 விநாயகர் சிலைகள், 4-வது நாளில் 16 விநாயகர் சிலைகள், 5-வது நாளில் 36 விநாயகர் சிலைகள், 6-வது நாளில் 42 விநாயகர் சிலைகள், 7-வது நாளில் 62 விநாயகர் சிலைகள் என 1,043 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கண்காணிப்பு
சிலைகள் கரைக்கும் இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் தாசில்தார் அறிவுடைநம்பி, துணை தாசில்தார் ரமேஷ், தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், உதவியாளர் முருகன் உள்ளிட்ட வருவாய் துறையினரும், கோனேரிபட்டி, அக்ரஹாரம் ஊராட்சி நிர்வாகத்தினரும் காவிரி ஆற்றங்கரையில் பந்தல் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
செந்தாரப்பட்டி
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்க நேற்று கடைசி நாள் என்பதால் திரளான பக்தர்கள் விநாயகர் சிலைகளை மேளதாளத்துடன் வந்து காவிரி ஆற்றங்கரையில் கரைத்தனர். மேலும் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செந்தாரப்பட்டி பகுதியில் 12 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்த நிலையில் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 12 சிலைகள் கரைக்கப்பட்டன. கெங்கவல்லி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் செல்லபாண்டியன், வேலுமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.