பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் 6 விநாயகர் சிலைகள் கரைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் 6 விநாயகர் சிலைகள் கரைக்கட்டது.

Update: 2023-09-19 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதனிடையே பா.ஜ.க. சார்பில் வைக்கப்பட்ட சிலை உள்ளிட்ட 6 சிலைகளுக்கு நேற்று பூஜை செய்யப்பட்டது. பின்னர் சிலைகளை ஊர்வலமாக சேலம் ரோடு, பஸ் நிலையம், போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம், வெங்கடசமுத்திரம் வழியாக வாகனங்களில் எடுத்து சென்றனர். பின்னர் வாணியாறு அணையில் அந்த சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்