2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தும்புராம்பட்டு கீழ் கொட்டாய் வடக்கே உள்ள பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 500 லிட்டர் கொள்ளளவுள்ள 4 பிளாஸ்டிக் பேரல் மற்றும் 200 லிட்டர் கொள்ளளவுள்ள ஒரு பேரலில் ஊறலை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.