1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

மோர்ப்பண்ணை கடற்கரையில் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.

Update: 2022-09-17 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி மோர்ப்பண்ணை கடற்கரை கிராமத்தில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் தமிழ்நாடு கடற்கரை தூய்மை இயக்கம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் தூய்மை பணி நடந்தது. இதற்கு மீனவம் காப்போம் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். சம்மேளன முதன்மை நிர்வாகி ஆறுமுகம், கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன் ஆகியோர் முன்னிலையில் கடற்பகுதியிலும், கடற்கரை ஓரத்தில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் தூய்மை பணியில் மீனவ மக்கள் ஈடுபட்டனர். சுமார் 1000 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மூடைகளாக கட்டி கடலூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.இதில் சம்மேளன பணியாளர்கள், கலங்கரை விளக்க மீனவர் சங்க பிரதிநிதிகள், மீன் விற்பனை கூட்டு பொறுப்பு குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்