முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

தென்காசியில், தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்

Update: 2022-11-13 18:45 GMT

தென்காசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தென்காசியை அடுத்துள்ள குத்துக்கல்வலசையில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனித்துரை, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, மேலகரம் செயலாளர் சுடலை, இலஞ்சி செயலாளர் முத்தையா, முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சமீம் இப்ராஹிம், குற்றாலம் கவுன்சிலர் கிருஷ்ணராஜா, வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்