சமணர் சிற்பம் கண்டெடுப்பு

சமணர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-06-05 18:55 GMT

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதியில் கமலாயி அம்மன் கோவிலில் சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை உள்ளூர் மக்கள் முருகன் என வழிபட்டு வந்தனர். இந்த சிற்பத்தை தற்போது புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் பாண்டியன் மற்றும் இந்திரஜித் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் இது சமணர் சிற்பம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அக்னி ஆற்றின் கரையில் பல இடங்களில் சமணர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவற்றுள் இச்சிற்பம் மட்டுமே நின்ற நிலையில் உள்ள சமணர் சிற்பமாகும். நின்ற நிலையில் இருக்கும் சமணரின் இரு பக்கத்திலும் 2 குத்து விளக்குகளும், இரு பக்கத்தில் சாமரமும், தலைக்கு மேல் முக்குடையுடனும் நிர்வாண கோலத்தில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அக்கினி ஆற்றங்கரையில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், இதுவரை முருகனாக வழிபட்டு வந்த நிலையில் படிந்து இருந்த எண்ணைப்பிசுக்குகளை தூய்மை செய்து ஆய்வு செய்து சமணச் சிற்பம் என்று உறுதிப் படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்