பழங்கால வழிபாட்டு நெடுங்கல் கண்டெடுப்பு

உசிலம்பட்டி அருகே பழங்கால வழிபாட்டு நெடுங்கல் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-11-22 18:55 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே பழங்கால வழிபாட்டு ெநடுங்கல் கண்டெடுக்கப்பட்டது.

நெடுங்கல்

பழங்கால மனிதர்களின் வழிபாட்டு முறையாக நெடுங்கல் அமைத்து வழிபடும் முறை தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கவண்டன்பட்டி, மானூத்து மாலைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான நெடுங்கல் வழிபாட்டு முறைகள் இன்றளவும் இருந்து வருகிறது.

தமிழகத்தின் தருமபுரி, ஈரோடு பகுதிகளில் காணப்படும் 7 அடிக்கும் மேலான உயரமான நெடுங்கல்லைப் போன்று, உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியில் உள்ள செல்லங்கருப்புசாமி கோவிலில் சுமார் 7 அடி உயரத்துடன் உள்ள ெநடுங்கல் வழிபாட்டில் இருந்து வருவதையும், கோவிலின் பின்பகுதியில் பட்டவன் சாமி என்ற நடுகல் சுமார் 3 அடி அகலம், இரண்டு அடி உயரத்துடன் உள்ளன.

நடுகல்லில் ஒரு ஆண், 3 பெண்களது புடைப்புச் சிற்பம் உள்ளதையும் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

தடயங்கள்

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, நெடுங்கல் வழிபாடு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உருவ வழிபாடுகளுக்கு முன்பாக இனக்குழுவின் தலைவன் நினைவாக இந்த நெடுங்கல் வழிபாடு இருந்து வந்தது. இதன் அருகில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான புடைப்புச் சிற்பத்துடன் கூடிய நடுகல் அமைத்துள்ளது. இதில் ஆயுதங்கள் இல்லாமல் தலைவன், இடது பக்கம் ஒரு பெண், வலது பக்கம் இரண்டு பெண் உள்ளனர். பொதுவாக ஆயுதம் ஏந்தியபடி காணப்படும் நடுகல் பரவலாக கிடைக்கிறது.

இங்கு ஆடை அலங்காரத்துடன் காணப்படும் சிற்பங்கள் கைகளில் மலர் மற்றும் கலசங்கள் ஏந்தியபடி இருப்பது தனிச்சிறப்பாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்த பகுதியில் 3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான தடயங்களாக இவை உள்ளன என்றார்

Tags:    

மேலும் செய்திகள்