கூடலூரில் வரி பாக்கி செலுத்தாத குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு; நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

கூடலூரில் வரி பாக்கி செலுத்தாத குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-03-29 20:45 GMT

கூடலூர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கூடலூர் நகராட்சிக்கு குடிநீர் வரி பாக்கி அதிக அளவு உள்ளது. இந்த வரிபாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி அலுவலர்கள் தினமும் வீடு, வீடாக சென்று குடிநீர் வரி பாக்கியை வசூலித்து வருகின்றனர். மேலும் கூடுதல் வரி பாக்கி உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நகராட்சிக்கு குடிநீர் வரி பாக்கி செலுத்தாதவர்கள் உடனடியாக கட்டணம் செலுத்தி குடிநீர் குழாய் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்