பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி

சோளிங்கர் அருகே பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-08-31 18:15 GMT

மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்பது எப்படி என்பது குறித்தும், உயிருக்கு போராடுபவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி சோளிங்கரை அடுத்த தக்கான் குளத்தில் நடந்தது. தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கனேஷன், பொதுப்பணித்துறை அலுவலர் சேரலாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், கிராம நிர்வாக உதவியாளர்கள் சிவகுமார், ஆதிகேசவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்