மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 90 கோடி ரூபாய் குறைத்து ஒதுக்கியதை கண்டித்தும், 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 1,300 கோடி ரூபாய் குறைத்துள்ளதை கண்டித்தும் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் மேனகா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கஸ்தூரி, மாவட்ட துணை செயலாளர் சந்திரபிரகாஷ், ஒன்றிய நிர்வாகிகள் மணிகண்டன், வினோத் குமார், ராஜேஷ்குமார் பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், செபாஸ்டின், ஜோதி, கமலா, சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.