மாற்றுத்திறனாளி வீரர் சாதனை

மாற்றுத்திறனாளி வீரர் சாதனை

Update: 2022-12-13 18:41 GMT

பனைக்குளம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டி.சி.சி.ஐ. கிரிக்கெட் போர்ட் ஆப் இந்தியா இணைந்து நடத்திய 3-வது தேசிய வீல்சேர் கிரிக்கெட் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூரில் நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முத்துச்சாமி தமிழ்நாடு அணிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடினார். இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக 53 ரன்களை 27 பந்துகளில் எடுத்து தமிழ்நாடு அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடந்த 3 ஆண்டுகளாக ஏ.பி.ஜே. மிசைல் பாரா விளையாட்டு அசோசியன் சங்கம் இவரைப் போன்ற பல மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து பயிற்சி அளித்து பல போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்