மாற்றுத்திறனாளி குரூப்- 2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை

மாற்றுத்திறனாளி குரூப்- 2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை

Update: 2022-11-20 19:58 GMT

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி குரூப்- 2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மெயின் தேர்விலும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது55). விவசாய கூலி தொழிலாளி. பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் கண்பார்வை இழந்தார். இதனால் பட்டப்படிப்பை முடித்தவருக்கு மேற்கொண்டு படிக்கவோ, வேலைக்கு செல்லவோ இயலாத நிலையில் விவசாய கூலி வேலை செய்தும், 100 நாள் வேலைக்கும் சென்று வருகிறார்.

குரூப்-2 பிலிமினரி தேர்வில் தேர்ச்சி

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குரூப்- 2 தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்கான முயற்சியை தொடங்கிய இவர், 100 நாள் வேலையின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தை படிப்பதற்காக பயன்படுத்தி உள்ளார். இவருக்கு கண் பார்வை முழுவதும் இல்லாததால், இவருடன் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த 65 வயது மூதாட்டியான பத்மாவதி என்பவரிடம் குரூப்-2 க்கான புத்தகத்தை வாங்கிக்கொடுத்து, அவர் படிக்க-படிக்க அதனை கேட்டு ரவிச்சந்திரன் நினைவுபடுத்தி கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான முதல் கட்ட (பிலிமினரி) தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மெயின் தேர்விலும் வெற்றி பெறுவேன்

இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறுகையில், தற்போது 100 நாள் வேலை பார்த்துக்கொண்டே மூதாட்டி பத்மாவதி உதவியுடன், குரூப்-2 மெயின் தேர்வுக்காக படித்து வருகிறேன். எனவே இந்த மெயின் தேர்வில் நான் வெற்றி பெறுேவன் என நம்பிக்ைகயுடன் ெதரிவித்தார். ரவிச்சந்திரனுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்