மாற்றுத்திறனாளிகள் குறைதீா்க்கும் கூட்டம்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது.

Update: 2023-04-21 20:59 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது.

குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், தனி தாசில்தார்கள் பிரேமாவதி, ரவி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகளை அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து ஒரு கால் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும். அரசு நிதியில் கட்டப்படும் வணிக வளாகங்களில் 5 சதவீதமும், அரசுப் பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கல்வி உதவித் தொகை

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வித் உதவித்தொகையை 2 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் அனைத்து பொதுத் தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகள் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு கால வரன்முறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதற்கு பதில் அளித்து பேசிய கோட்டாட்சியர் பூர்ணிமா மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்