சிறுபான்மை நலத்துறை இயக்குனர் ஆய்வு

வேலூரில் சிறுபான்மை நலத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-09-30 17:15 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலை வைத்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அவர் விளக்கி கூறினார். மேலும் திட்டங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, கடன் திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் சீதா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் வேலூரில் பல்வேறு இடங்களில் டாம்கோ கடன் உதவி திட்டத்தின் கீழ் இயங்கும் மளிகை கடை, பேக்கரி, ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்