தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-02-01 19:12 GMT

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் தந்தி மர தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்வோர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சுந்தரபாண்டியம்.

திறக்கப்படாத சுகாதார வளாகம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் இருவர்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் பல நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இருவர்குளம்.

பக்தர்கள் அவதி

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் தேரடி தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதைகளில் போதிய அளவில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சாத்தூர்.

சாலை வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் உள்ள தெருவில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த தெருவில் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அச்சம்தவிர்த்தான். 

Tags:    

மேலும் செய்திகள்