தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-08 21:34 GMT

டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டுக்கு வருமா?

மதுரை மாவட்டம் செக்கானூரணி-திருமங்கலம் ரோட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் வைத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வராத நிலையே உள்ளது. இதனால் இந்த பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. எனவே டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரகுபதி, செக்கானூரணி.

சுகாதார சீர்கேடு

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்கள் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

சேதமடைந்த நூலக கட்டிடம்

மதுரை மாநகர் 30-வது வார்டு பகுதியில் உள்ள கிளை நூலகத்தில் பழமையான மரம் விழுந்து கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நூலகத்திற்கு வரும் மக்கள் மிகவும் சிரம்ப்படுகின்றனர். எனவே மரத்தை அகற்றி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்படுமா?

முத்துசாமி, மதுரை.

விபத்து அபாயம்

மதுரை மேலூர் ரோட்டில் ஒத்தக்கடையில் இருந்து மாட்டுத்தாவணிக்கு வரும் மெயின் ரோட்டிலும், மாட்டுத்தாவணியில் இருந்து பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், கே.கே. நகர், அண்ணா நகர் வழியாக செல்லும் மெயின் ரோட்டிலும் நிறைய பள்ளங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், மேலூர்.

வீணாகும் குடிநீர்

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகா மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பில்லுசேரி கிராமத்தில் தெரு குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிதண்ணீர் வீணாகி செல்கிறது. எனவே, இதனை சீரமைத்து புதிய குடிநீர் குழாய் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதீஷ்குமார், மாத்தூர். 

Tags:    

மேலும் செய்திகள்