தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-13 18:46 GMT

பூங்கா வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிப்பட்டி கிராமத்தில் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்கு பூங்கா இல்லை. இந்த பகுதியில் பூங்கா அமைத்து கொடுத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறுவர். எனவே இப்பகுதியில் உடற்பயிற்சி கூடத்துடன் சிறுவர் பூங்கா அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கரன், தம்பிப்பட்டி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் ெதால்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தளவாய்புரம்.

போக்குவரத்திற்கு இடையூறு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த மாடுகள் சாலையின் குறுக்கே நின்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ராஜபாளையம்.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டுள்ள நிலையில் நகர் முழுவதும் காற்று மாசாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அல்லல்படுவதோடு சுவாச பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதி, ராஜபாளையம்.

பயணிகள் நிழற்குடை தேவை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம் முக்குரோடு பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் பஸ் ஏறுவதற்காக வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் இங்கு வரும் மக்கள் வெயிலிலும், மழையிலும் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிக்குமார், ஆலங்குளம்.

Tags:    

மேலும் செய்திகள்