தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த இந்த சாலையினை விரைவாக சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், அல்லம்பட்டி.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட மலைப்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபரீதம் ஏதும் நேருவதற்கு முன்னதாக சேதமடைந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவாக சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், மலைப்பட்டி.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பஞ்சாயத்து த.சேடபட்டி கிராமத்தில் வாட்டர் டேங்க் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த மின்கம்பத்தில் உள்ள வயர்கள் மிகவும் தாழ்வான நிலையில் மரங்களில் உரசியபடி செல்கிறது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமார், த.சேடபட்டி.
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை தொழிற்பேட்டை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
பரத்ராஜா, சூலக்கரை.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வத்திராயிருப்பு.
பஸ்வசதிதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து திருமங்கலத்திற்கு போதுமான அளவு நகர பஸ்கள் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் கூடுதலாக நகர பஸ்கள் இயக்க வேண்டும்.
செல்வி, சாத்தூர்.