தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-09-17 19:15 GMT

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் ஒரு சில இடங்களிலில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மானாமதுரை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜா, காரைக்குடி.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சிவகங்கை நகர் பகுதிகளில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகளால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையில் செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தேவகோட்டை.

வீணாகும் குடிநீர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தென்மாப்பட்டில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம், தென்மாப்பட்டு.

Tags:    

மேலும் செய்திகள்