தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-09-10 20:46 GMT

வீணாகும் குடிநீர்

மதுரை கென்னட் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், மதுரை.

தெருவிளக்குகள் வேண்டும்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அய்யங்கோட்டை காலனியில் கடந்த சில நாட்களாக ஒரு சில தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் குழந்தைகள், பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அனைத்து தெருவிளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வாடிப்பட்டி.

சுகாதார சீர்கேடு

மதுரை மாநகராட்சி 32-வது வார்டு காவலர்கள் குடியிருப்பு அருகில் சாலை பள்ளமாக உள்ளதால் மழைநீரும் சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சாலையை சரி செய்து மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிச்செல்வன், மதுரை.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பழங்காநத்தம்.

குண்டும் குழியுமான சாலை

மதுரையிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உசிலம்பட்டி அருகே சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித் குமார், உசிலம்பட்டி

Tags:    

மேலும் செய்திகள்