தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-27 19:00 GMT

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தேவகோட்டை.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டத்தில் பல கண்மாய்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இந்த கண்மாய்களில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?.

பொதுமக்கள், சிவகங்கை.

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதில் பல நாய்கள் தோலில் ஒரு வித நோயுடன் வலம் வருகின்றது. மேலும் சாலைகளின் குறுக்கே செல்வதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

பஸ்வசதி செய்து தரப்படுமா?

சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே துரும்புப்பட்டி கிராமத்தில் பஸ் வசதிகள் இல்லை. அவசர சூழ்நிலைகளில் 3 கிலோ மீட்டர் நடந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் விரைந்து பஸ் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரன், பாகனேரி.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், காரைக்குடி.

Tags:    

மேலும் செய்திகள்