தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-06 18:45 GMT

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கையில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு மதியம் வேளைகளில் இயக்கப்படும் பஸ்கள் குறைந்த அளவே உள்ளன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பயணிகள் நலன்கருதி இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பிரேம்குமார், சிவகங்கை.

தொல்லை தரும் நாய்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் நடைபாதையினர், வாகனஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மோகன், காரைக்குடி.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட தகுந்த அளவே உள்ளது. இதனால் இங்கிருந்து கிராமப்புற பகுதிகளுக்கு செல்ல பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, கல்லல்.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் பனங்குடி ஊராட்சி புதுவளவு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவீந்திரன், புதுவயல்.

குரங்குகள் அட்டகாசம்

இளையான்குடி அருகே சோதுகுடி கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகளின் தொல்லைகளால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பெரும்பாலும் பகல் நேரங்களில் குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை தின்று அட்டகாசம் செய்கின்றன. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சப்படுகின்றனர். வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோதுகுடி.

Tags:    

மேலும் செய்திகள்