'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-15 20:50 GMT

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் பயணிக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை மாநகராட்சி 29 - வது வார்டு வெண்மணி ரோடு மற்றும் ஜான்சிராணிபுரம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளன. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துகிருஷ்ணன், மதுரை.

ரேஷன் கடை வேண்டும்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், பாண்டாங்குடி.

குவிந்து கிடக்கும் குப்பை

மதுரை நரிமேட்டிலிருந்து செல்லூர் செல்லும் 60 அடி ரோடு பாலத்தில் உள்ள குப்பை தொட்டியில் குப்பை குவிந்து கிடக்கிறது. அங்கு. குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், செல்லூர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வரை இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் மாணவிகள் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், தென்கரை.

Tags:    

மேலும் செய்திகள்