தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த கட்டிடம்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகக் கட்டிடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த சுகாதார நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கார்த்திக், கீழக்குன்னுப்பட்டி.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பூலாங்குடி காலனியில் உள்ள அங்கன்வாடி அருகே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராதாகிருஷ்ணன், பூலாங்குடி காலனி.
ஊருக்குள் வராத பஸ்கள்
உப்பிலியபுரம் ஒன்றியம், பி.மேட்டூர் வழியாக செல்லும் பஸ்கள் பெரும்பாலும் புறவழிச்சாலையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தாத்தையங்கார்பேட்டையில் இருந்து பி.மேட்டூர் வழியாக உப்பிலியபுரம் செல்லும் பஸ்கள் காலதாமதத்தை காரணம் காட்டி பெரும்பாலும் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதால் பொதுமக்கள், முதியோர் மற்றும் பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் அனைத்து பயணங்களிலும் ஊருக்குள் வந்து செல்ல சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பெரியசாமி, பி.மேட்டூர்.