தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-21 19:54 GMT

உடைந்து கிடக்கும் இருக்கைகள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதியில் முட்டுவாஞ்சேரி செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் மது போதையில் இந்த இருக்கையை அடித்து உடைத்துள்ளனர். தற்போது இருக்கைகள் உடைந்து கிடப்பதால் பயணிகள் உட்கார இருக்கைகள் இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், வி.கைகாட்டி.

நிழற்குடை அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது வி. கைகாட்டி மேற்கு பகுதியாகும். இங்கு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வடபுறத்தில் அரியலூர் செல்வதற்கு பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இங்கு பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை அமைக்காமல் உள்ளது. அரியலூர், பெரம்பலூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் மிகவும் சிரமப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

எரியாத தெருவிளக்கு

அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் ஊராட்சி முக்குளம் கிராமத்தில் தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாலையில் நடை பயிற்சி செல்வோர் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜோதிராஜன், முக்குளம்.

Tags:    

மேலும் செய்திகள்