தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால், இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அங்கு ஏற்கனவே கடை அமைத்திருந்த வியாபாரிகளும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பெண்கள் கழிவறை இன்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிவப்பிரகாசம், கறம்பக்குடி.