தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-07 17:58 GMT

தொடரும் விபத்துகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரும்பு தடுப்புகள் மீது போதுமான அளவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால், இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலத்தூர், பெரம்பலூர். 

Tags:    

மேலும் செய்திகள்