தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-06 17:42 GMT

தெருநாய்களால் தொல்லை

திருச்சி குண்டூர் அய்யனார்நகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை கூட்டம் கூட்டமாக நின்று ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க துரத்துவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குண்டூர், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ரெயில்வே சுரங்கப்பாதை சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குருராஜன், ஸ்ரீரங்கம், திருச்சி.

நோய் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, மேய்க்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தின் முன்பு சேகரமாகும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாலும், அருகிலுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீர் செல்ல வழியின்றி சாக்கடை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தேங்கி நிற்கும் நீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மேய்க்கல்நாயக்கன்பட்டி, திருச்சி.

ஆபத்தான மின்கம்பங்கள்

திருச்சி மாவட்டம், மணிகண்டம், மட்டபாறைபட்டி தெற்குத்தெரு, அண்ணாநகர் பகுதிகளில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மட்டபாறைபட்டி, திருச்சி. 

Tags:    

மேலும் செய்திகள்