தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-05 18:13 GMT

பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் புதிய பஸ் நிலையம் கட்டி 4 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு ஏற்கனவே கடை அமைத்திருந்த வியாபாரிகளும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகும் அதே நிலை நீடிக்கிறது. இங்கே கரம்பக்குடியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளது. பக்கத்து கிராமங்களில் இருந்து கரம்பக்குடிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் கழிவறை வசதி இல்லாமல் பெண் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிவப்பிரகாசம், கரம்பக்குடி, புதுக்கோட்டை.

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா முள்ளூருக்கு புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து பல ஆண்டுகளாக மாலையில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாலை நேரத்தில் வீடு திரும்பு மாணவ-மாணவிகள் பஸ் வசதி இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முள்ளூர், புதுக்கோட்டை. 

Tags:    

மேலும் செய்திகள்