தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-02 18:33 GMT

கால்நடைகளை கடிக்கும் தெருநாய்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடைகளை தெருநாய்கள் கடித்து குதறுகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை அகற்றியதை போல் தெரு நாய்களையும் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள், ஜெயங்கொண்டம்.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்கு ஏரிக்குகரை தென்புறம் மற்றும் மேல் புறம் உள்ள வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக போதுமான அளவு குடிநீர் வருவது இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வளவெட்டிக்குப்பம், அரியலூர்

Tags:    

மேலும் செய்திகள்