பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி

தினத்தந்தி புகாா் பெட்டி

Update: 2022-07-22 20:36 GMT

சாலையில் குழி

கோபியில் உள்ள சத்தியமங்கலம் மெயின்ரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரே சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள். இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் விபத்தில் சிக்குகிறாா்கள். எனவே சாலையில் உள்ள குழியை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபிசெட்டிபாளையம்.

குப்பை அகற்றப்படுமா?

அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதியில் ஒரு வளைவு உள்ளது. இந்த வளைவான பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசுகள் விழுகின்றன. மேலும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

கழிவுநீர் செல்ல தடை

கோபியில் தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள பாலத்தை கடந்து செல்ல வேண்டும். அங்குள்ள ஓடையில் கழிவுநீர் செல்லும் வழியில் செடி, கொடிகள் வளர்ந்தும், ஆகாயத்தாமரைகள் படர்ந்தும் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் அந்த பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் செல்வதற்கு தடையாக உள்ள செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

ஆபத்தான பள்ளம்

ஈரோடு சூரம்பட்டிவலசு சங்குநகர் பிரிவில் நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும், அங்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் நடந்து செல்பவர்களும் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே ஆபத்தான பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சூரம்பட்டிவலசு.

புழுதி பறக்கும் சாலை

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மூலப்பட்டறைக்கு செல்லும் ஈ.வி.கே.சம்பத் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையின் ஓரத்தில் மண் படிந்து இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையோரம் உள்ள மண்ணையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திவ்யபாரதி, ஈரோடு.

சாக்கடை வடிகால் தேவை

அந்தியூர் ஒன்றியம் பச்சாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி கணபதி நகா். இங்கு சாியான சாக்கடை வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. தெருவிளக்கு இல்லாததால் இங்குள் வீதியில் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி கணபதி நகரில் சாக்கடை வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராதாகிருஷ்ணன், பச்சாபாளையம்.

பாராட்டு

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சி பிருந்தாவன் நகர் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருந்து வந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஊராட்சி அதிகாரிகள் பிருந்தாவன் நகரில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

பொதுமக்கள், மாதம்பாளையம்.

Tags:    

மேலும் செய்திகள்