ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தபால் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தபால் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம் என்று நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளாா்.

Update: 2023-07-10 18:45 GMT


ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தபால் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம் என்று நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உயிர்வாழ் சான்றிதழ்

மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம் தபால்துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி, ஓய்வூதிய தாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, அவர்களது வீடுகளுக்கு தபால் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே...

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கமுடியும்.

இந்த சேவையை பெறுவதற்கு ccc.cept.gov.in/covid/ request, aspx என்ற இணையதளத்தை பயன்படுத்தி கோரிக்கை கொடுத்தால் உங்கள் பகுதி தபால்காரர் உங்களை தேடி வந்து தேவையை பூர்த்தி செய்து தருவார். எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்