ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

Update: 2023-04-19 18:25 GMT

தமிழ்நாடு அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று போலீஸ் நிலையங்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கோப்பை வழங்கப்படும். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தை சிறந்த போலீஸ் நிலையம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது போலீஸ் நிலையத்தில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதாகவும், சிறப்பாக உள்ளதாகவும், போலீஸ் நிலையத்தின் சுற்றுப்புறம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போலீஸ்காரர்களுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய ஓய்வு அறையை திறந்து வைத்தார். போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் படிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை பார்வையிட்டு இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆகியோரை பாராட்டினார். மேலும் போலீஸ் நிலைத்தில் மரக்கன்று நட்டார். போலீஸ்காரர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கூடுதல் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை சூப்பிரண்டு பிரபு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்